கரூரில் தேர்தல் நடத்தல் விதிமீறலை வீடியோ எடுத்த தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
கரூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க.வினர் 10- க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்ததாகக் கூறப்படுகிறது. அதனை வீடியோ கண்காணிப்புக் குழு அதிகாரிகள், படம் பிடித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் வாகனத்தை வழி மறித்து தேர்தல் அதிகாரி வினோத் குமாரை, ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், தேர்தல் அதிகாரி வினோத் குமார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 5 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.