கோடைகால மின் தேவையை சமாளிக்க, 7915 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடைகாலத்தில் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாதிப்பின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கோடைகால மின்தேவையை சமாளிக்க மின்வாரியம் தனது சொந்த உற்பத்தியை தவிர, ஒன்றிய தொகுப்பில் இருந்தும், வெளிச் சந்தையிலும் இருந்தும் மின்சாரத்தை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி கோரி, மின்வாரியம் தரப்பில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி இருந்தது. கோரிக்கையை பரிசீலனை செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரும் கோடை கால மின் தேவையை சமாளிக்க 7915 மெகாவாட் மின்சாரத்தை குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் வாங்கிக் கொள்வதற்கு மின்வாரியத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, மார்ச் மாதம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 வரை 850 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி 1425 மெகா வாட், ஏப்ரல் மாதம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1300 மெகா வாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி 2610 மெகா வாட், மே மாதம் முதல் 10 தேதி வரை நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 வரை 650 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி 1080 மெகா வாட் என்று மொத்தம் 7915 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
நான் முதல்வன் திட்டம் … கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் – கேரனா புக் லித்தியா மகிழ்ச்சி