Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூர் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவர் பலி!

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவர் பலி!

-

- Advertisement -

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மிதித்து பாகன் உள்ளிட்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் இந்த யானையை, உதயகுமார் என்ற பாகன் கவனித்து வந்தார். இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணி அளவில் யானைக்கு பழங்கள் வழங்குவதற்காக யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் தெய்வானை யானை அருகில் சென்றுள்ளனர். அப்போது தெய்வானை யானை திடீரென ஆக்ரோஷத்துடன் அவர்களை தாக்கி மிதித்துள்ளது.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ