
அரிசிக்கொம்பன் யானை தற்போது எந்த இடத்தில் உள்ளது என்பதைத் தெரிவிக்க உத்தரவிடக்கோரிய மனுதாரருக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!
அரிசிக்கொம்பன் யானை தொடர்பான பொதுநல மனுவை நேற்று (ஜூலை 06) விசாரித்த உச்சநீதிமன்றம், அரிசிக்கொம்பன் யானை விவகாரத்தில் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களால் தாங்கள் சோர்வடைந்துவிட்டதாக, அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், வன விலங்குகள் எங்கே உள்ளன? என்பதை ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!
பொதுநல மனுவைத் தாக்கல் செய்த மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.