Homeசெய்திகள்தமிழ்நாடுசிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

-

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், யானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

மலை அடிவாரத்திற்கு வரக்கூடிய விலங்குகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே பாதுகாப்புக்காக கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகிரி பகுதியை சேர்ந்த விவசாயி கருப்பசாமி என்பவரது கரும்பு தோட்டத்தில் சட்ட விரோதமாக வேலியில் உயர் அழுத்த மின்சாரத்தை கொடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கரும்பு காட்டிற்குள் நுழைய முயன்ற 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்த வனக்காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மருத்துவக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

மாவட்ட வன அலுவலர் முருகன் மேற்பார்வையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு யானையின் உடல் புதைக்கப்பட்டது. கரும்புத் தோட்ட உரிமையாளர் கருப்பசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ