Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை பலி!

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை பலி!

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை வனப்பகுதியில் இருந்து வலம் வந்த மூன்று யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று முன் தினம் இரவு வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில் அப்போது பாலதோட்டனப்பள்ளி அருகே உள்ள தனியாரின் கிரீன் அவுஸ் அருகே யானைகள் சென்றபோது தாழ்வாக செல்லும் மின்கம்பியில் ஒரு ஆண் யானை சிக்கியது. இதில் அந்த யானை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

மீதமுள்ள மற்ற இரண்டு காட்டு யானைகளை நேற்று காலை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்கு விரட்டினர். இதனைத்தொடர்ந்து ஆண் யானை இறந்த செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்கோட்ட உயிரினக் காப்பாளர் கார்த்திகேயினி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இறந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும். 8 அடிக்கும் கீழ் மின்கம்பி தொங்கியபடி சென்றதால் அதில் யானை உரசி, மின்சாரம் தாக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் யானையை அங்கேயே குழிதோண்டி புதைத்தனர்.

 

MUST READ