Homeசெய்திகள்தமிழ்நாடுகும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு... 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு… 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

-

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு தொடர்வதால் 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 6 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து தொடர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.மேலும் அருவிக்கு நீர்வரத்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ