கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26-ஆம் தேதி வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனையை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது 2- வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் சோதனைக்கு முகாமிட்டு உள்ளனர், சோதனையானது கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம், ஆம்பாள் நகரில் உள்ள அமைச்சரின் உதவியாளர் சங்கர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் வீடு மற்றும் அலுவலகம் பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து கரூரில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது என்பது கூறப்படுகிறது.