Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக அலுவலக ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

-

பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதி குமார் என்பவர் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. சென்னை ஓஎம்ஆர் உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

சென்னை தியாகராய நகர் சரவணா நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதி குமார் என்பவர் இல்லத்தில் அமலாக்கத்துறையினரின் அதிரடி சோதனை நடைபெறுகிறது. பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸுக்கு சொந்தமான இடங்கள், தஞ்சை ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ