Homeசெய்திகள்தமிழ்நாடுதேவநாதன் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை - அமலாக்கத்துறை தகவல்

தேவநாதன் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை – அமலாக்கத்துறை தகவல்

-

தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகிய 7 பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதி நிறுவனத்தில் மோசடி - வின் டிவி உரிமையாளர் தேவநாதன் கைது

இந்த நிலையில், நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, முதலீட்டாளர்கள் நலச்சங்க தலைவர் சதீஷ்குமார் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.

அப்போது, ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறைக்கு கிடைத்த தகவல்கள் மூலம், வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

MUST READ