
தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மனம் நிறைந்தது விரல் உடைந்தது…. அதிர்ச்சியளிக்கும் KPY பாலாவின் இன்ஸ்டா பதிவு!
பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரணப் பணிகளை மத்திய நிபுணர் குழு பாராட்டியுள்ளது. மத்தியக்குழு கருத்தையே என்னை சந்தித்தபோது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்தார்.
கொள்கை முரண்பாடு இருந்த போதும், மத்திய அமைச்சர் பாராட்டுவதற்கு அரசின் சிறப்பான செயல்பாடே காரணம். பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக காலநிலை மாற்ற இயக்கத்தைத் தொடங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். நேரில் சந்தித்த போது, இனிமையாக பழகிய ஆளுநர் தமிழக வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்.
மழை பாதிப்பைக் குறைக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது அவசியம். நெல் வயல்கள் குடியிருப்புகளாக மாறுவதைத் தடுக்க மூன்றாவது முழுமைத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறியதால் அக்கட்சி வெற்றி பெற்றது.
நான்கு வருடம் ஆகுமா?….தாமதமாகும் ‘விடுதலை 2’…. முடிவை மாற்றிய படக்குழு!
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒன்றுச் சேர்க்க இந்தியா கூட்டணி முயற்சி செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.