Homeசெய்திகள்தமிழ்நாடுஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

-

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3,051 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. சுமார் 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த ஆலையை ரூ. 3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

tamilnadu assembly

இந்த நிலையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் முலம் தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வரும் ஆலை, 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் தற்போது தினசரி 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

MUST READ