எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!
போதைப்பொருள் விவகாரத்தில் தன் மீது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதலமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
ஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் போதைப்பொருளைக் கடத்தி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ள நிலையில், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.