Homeசெய்திகள்தமிழ்நாடுஉச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

-

- Advertisement -

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

OPS

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டு பொதுச்செயலாளார் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ்-ன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்த கட்சி தேர்தலும் செல்லும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டுவை மனு தள்ளுபடி உத்தரவிட்டனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரின் நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியான நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், தன் கருத்தை கேட்ட பின்பே உத்தரவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேவியட் மனு தாக்கல் செய்யதுள்ளார்.

MUST READ