- Advertisement -
குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் “குவைத் நாட்டின் மங்காப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் உடல்களை அவர்தம் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தூதரக உதவியுடன் துரிதமாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.