Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம், திருச்செங்கோடு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்!

சேலம், திருச்செங்கோடு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, மாண்புமிகு கழகப் பொது செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு.
@EPSTamilNadu அவர்கள், நேற்று நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோடு, வாலறை கேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், நாமக்கல் தொகுதி கழக வேட்பாளர் திரு. S. தமிழ்மணி அவர்களுக்கு, ‘இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதே போல் நேற்று சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், சேலம் தொகுதி கழக வேட்பாளர் திரு. P. விக்னேஷ் அவர்களுக்கு, ‘இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

MUST READ