தந்தை பெரியாவின் 145-வது பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் முழுத் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
என்கவுன்ட்டர் செய்யப்படும் முன்பு காவல் நிலையத்தில் பேசிக் கொள்ளும் வீடியோ வெளியீடு!
இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல், எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
“அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
பெரியாரின் பிறந்தநாளையொட்டி, எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.