Homeசெய்திகள்தமிழ்நாடு2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி - இபிஎஸ்

2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி – இபிஎஸ்

-

"மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால் என்னிடம் கூறுங்கள்"- பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் நாகை, மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொண்டர்கள் யாரும் துவண்டுவிட வேண்டாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி. சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம். சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும். அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி என்ற எண்ணம் மக்களிடையே தற்போதும் நிலவுகிறது. அதனை முறியடிக்க வேண்டும் என இவ்வாறு பேசினார்.

MUST READ