எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் : வாழ்த்து கூறிய ரஜினி..
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று (டிச.08) விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “லஞ்ச ஒழிப்புத்துறை முடித்த வழக்கை மீண்டும் அனுமதிக்க வேண்டி மனுத்தாக்கல் செய்துள்ளனர்” என்று வாதிட்டார்.
D50 ஐ தொடர்ந்து தனுஷ் இயக்கும் புதிய படம் ….. அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!
இதையேற்று லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற அமர்வு, லஞ்ச ஒழிப்புத்துறையின் வாதங்களை ஏற்க மறுத்தது. அதேபோல், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சட்டப்படி நடக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டம் எதை அனுமதிக்கிறதோ, அதற்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.