மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை இன்று (செப்.14) டெல்லியில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து பல்வேறு வியூகங்கள் எழுந்துள்ளன.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க.வின் மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் இன்று (செப்.14) விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். பயணத்தின் போது, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வியூகங்கள் குறித்தும், தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்தும், பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ள மசோதாக்கள் குறித்தும், இச்சந்திப்பின் போது, பேசப்படும் எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் கட்டப்பட்டு வரும் அ.தி.மு.க. அலுவலகத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு அறிவிப்பு!
எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமிக்கும் பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.