‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’,சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் – பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், சமூகத்தில் சரி பாதியாக இருக்கின்ற பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தினை கொண்டுவந்தார்.அதன் அடிப்படையில் பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிடபட்டது. அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய மூன்று சகோதரிகள் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த சகோதரிகளை வாழ்த்தும் விதமாக திமுக அரசின் சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அப்பெண்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை கூறினார் . அவர்களுடைய பணிக்கு பயனளிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதி திமுக அரசின் சார்பாக வழங்கபட்டது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறுகையில் ,அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் – பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த சகோதரிகளின் பணி சிறக்கட்டு ம் இது போன்ற பல பெண்கள் அர்ச்சகர்களாவதற்கு திமுக சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.