ஈரோட்டில் மக்களவை உறுப்பினராக இருந்த கணேச மூர்த்தி மாரணடைப்பால் உயிரிழந்ந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், மதிமுகவைச் சேர்ந்த கணேச மூர்த்தி. அதிலிருந்தே இவருக்கும் திமுகவினருக்கு நெருக்கம் அதிகமாக அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மதிமுகவில் உள்ள கட்சி பொறுப்புகள் இவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் கணேச மூர்த்தி. இந்த சூழ்நிலையில் திமுகவானது மதிமுகவிற்கு ஈரோடு தொகுதிக்கு பதில் திருச்சி தொகுதியை ஒதுக்கி கொடுத்தது. திருச்சி தொகுதியில் துரை வைகோ களம் இறங்குவதாக மதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதனால் கணேச மூர்த்தி கடும் அதிர்ச்சிக்குள்ளாகி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கணேச மூர்த்தி கடந்த 24 ஆம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் சல்பாஸை தண்ணீரில் கலந்து குடித்ததில் சுயநினைவின்றி சரிந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவனையில் அனுமதித்த அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.