‘சாதிய ரீதியில் பேசி துன்புறுத்தல்’ ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக சுகாதாரச் செயலாளருமான ககன்தீப்சிங் பேடி தன்னை சாதிய ரீதியாக துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மனுஷ் நரனவாரே ஐஏஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருப்பவர் டாக்டர் மனிஷ் நரனவாரே. இவர் கடந்த 14/06/2021 முதல் 13/06/2022 வரை, சென்னை மாநகராட்சியின் துணை சுகாதார ஆணையராக இருந்தபோது அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங் பேடி, தன்னை சாதிய ரீதியாக பேசி பாகுபாடு காட்டி துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்டு, என்னை பணிநிமித்தமாக அடக்குமுறை செய்து கோப்புகளில் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தியதாகவும் டாக்டர் மனுஷ் நரனவாரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் எனக்கும் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியதாகவும், அவரது தொந்தரவு தாங்காமல் மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும் ககன்தீப்சிங் பேடி மீது டாக்டர் மனுஷ் நரனவாரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு 2 பக்க புகாரையும் டாக்டர் மனுஷ் நரனவாரே அனுப்பியுள்ளார்.