Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் நடந்தது புளியோதரை மாநாடு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மதுரையில் நடந்தது புளியோதரை மாநாடு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

-

- Advertisement -

மதுரையில் நடந்தது புளியோதரை மாநாடு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன் என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

evkselangovan

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். TNPSC தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது. மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளது, அந்த மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றும் பாதயாத்திரை போகவில்லை, வாகன யாத்திரை தான் சென்றிருக்கிறார். நடிகர் ரஜினி உத்தரப் பிரதேச முதலமைச்சர் காலில் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.

MUST READ