ஆண்டுக்கு ஒரு பிரதமர் என வந்தாலும் என்ன நஷ்டம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய வரலாற்றில் இது மோசமான தேர்தல். தேர்தல் ஆணையம் வழிமுறைகளை மீறி பிரதமர் மோடி தியானம் செய்கிறார். இது எந்த வகையில் நியாயம் . ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தால் தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தில் நிற்கவைக்கப்படுவார்கள்.
ராகுல் காந்தி , ஸ்டாலின் ஆகியோர் ஒன்றிணைந்து பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார்கள். திருமாவளவன் பிரதமராக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு பிரதமர் என வந்தாலும் என்ன நஷ்டம். ஜெயலலிதா படித்த பள்ளியில் மாதா கோவில் முன்பு மெழுகுவத்தி ஏத்தி ஜெபம் செய்துள்ளார். இப்தார் விருந்தும் வைத்தார் . ஜெயலலிதாவை பொருத்தவரை எந்த மதமும் சம்மதம் என்று கொள்கையுடன் இருந்தவர் . அவரைக் குறுகிய வட்டத்திற்குள் அடைக்க பார்க்கிறார் அண்ணாமலை . இதற்கு காரணம் அண்ணாமலைக்கு அறியா வயசு தமிழக அரசியல் வரலாறு தெரியவில்லை 4ம் தேதி பிறகு அதிமுக இருக்காது என்று அண்ணாமலை கூறி வருகிறார். நான்காம் தேதிக்கு பிறகு அண்ணாமலை தமிழகத்தில் இருப்பாரா என்பதை தெரியவில்லை என்றார்.