Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்வு முடிவுகள்- தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

தேர்வு முடிவுகள்- தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

-

- Advertisement -

தேர்வு முடிவுகள்- தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகளுடைய முடிவுகள் வெளியிடப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Students from private schools joining state-run schools a heartening trend: Tamil  Nadu Minister | Education News,The Indian Express

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடவாரியான எண்ணிக்கை விவரம் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாகக் கணக்கிட்டு பாடவாரியான / பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாட்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்ற வேண்டும். மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்றுமொழி வாரியான விடைத்தாட்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும்.

Over 5 lakh govt school teachers in Tamil Nadu to go on indefinite strike  from Jan 22 | The News Minute

விடைத்தாள் திருத்தும் பணி பணி குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதமில்லாமலும் நடைபெற வேண்டும். அரசு பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்ப வேண்டும்.

எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்.எனவே ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப் பட்டியலை (Teachers: Profile) தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும்.

மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள்/மூன்று முகாம்கள் அமைக்கப்பெற்றிருப்பின் முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (CE, AE, SO & MVO) சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 19.04.2023-க்குள் நியமன ஆணை தவறாமல் வழங்கிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

MUST READ