இன்று மதியம் உணவு இடைவெளிக்கு பின்னர் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர்.திர்பாராத விதமாக பட்டாசு உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள மூன்று அறைகள் தரைமட்டம் ஆகின.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 30, காளிராஜ் 28 ஆகியோருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. சென்னை உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் உணவு இடைவெளிக்கு பின்னர் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர் .
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள மூன்று அறைகள் தரைமட்டம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன மேலும் விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.