திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம், திருப்பதி உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காமராஜர் பிறந்தநாளில் உதயமாகும் தளபதி விஜய் பயிலகங்கள்!
கொரோனா காலத்திற்கு முன்பு வரை, கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் 10- க்கும் விரைவு ரயில்கள் நின்று சென்ற நிலையில், தற்போது மூன்று ரயில்கள் மட்டும் நின்றுச் செல்கின்றன.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையினை ஏற்று, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில், ராமேஸ்வரம்- திருப்பதி விரைவு ரயில் மற்றும் கன்னியாகுமரி- புதுச்சேரி விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!
இதனால் திருப்பாதிரிப்புலியூர் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.