Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை , ஆரஞ்சு எச்சரிக்கை ! - இந்திய...

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை , ஆரஞ்சு எச்சரிக்கை ! – இந்திய வானிலை ஆய்வு மையம்

-

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை , ஆரஞ்சு எச்சரிக்கை ! - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிக வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்திய வானிலை இன்று (மே 2) விடுத்துள்ள எச்சரிக்கையின் படி தமிழகத்தின் கிருஷ்ணகிரி ,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பதை விடுத்துள்ளது.

 

 

இதேப்போல் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை என்பதையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இவை தவிர காற்றின் சுழற்சி காரணமாக நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை என்பதையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

நடப்பாண்டில் தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை மட்டுமே நேற்று வரை விடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ