சாலை விபத்தில் உயிரிழந்த விஜய் ரசிகரின் கண்கள் தானம்
விஜய் மக்கள் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நடிகர் விஜய்யின் உத்தரவுபடி ‘தளபதி விஜய் விழியகம்’ என்ற கண்தான அமைப்பை தொடங்கப்பட்டது.
அந்த அமைப்பில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அதில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியை சேர்ந்த கரண் என்பர் கண்தானம் செய்ய பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி கரண் சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரணின் கண்களை தானமாக வழங்கியுள்ளனர். அதற்கான சான்றிதழ் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் விழியகம் தொடங்கப்பட்டு முதல் கண் தானம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது.