10-ம் வகுப்பில் தோல்வி- மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தெங்கியநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரும், இவரது மனைவி சத்யா, மகள் ஷர்மி ஆகிய மூவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் நிலையில், இவரது இளைய மகன் வெற்றிவேல் தெங்கியநத்தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றிவேல் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த வெற்றி வேல் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக கச்சிராயபாளையம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இது தொடர்பாக கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் தாய், தந்தை, தங்கை மூவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.