பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தமிழக அரசு தெரித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 2,20,94,585 அரசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.