Homeசெய்திகள்தமிழ்நாடுதாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

தாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

-

Thiruvallur shop Smuggling
திருவள்ளூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை மிரட்டி, தாலியை அடகு வைக்கச் செய்து 51,000 பணம் பெற்ற போலி போலீஸை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (44). இவர் திருவள்ளூர் ஆயில் மில் பகுதி அருகே உள்ள இந்திரா காந்தி சாலையில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதியன்று ஜெயந்தி கடைக்கு வந்த மர்ம நபர் கடையில் ஹான்ஸ் பாக்கெட் கேட்டு பணம் கொடுத்து வாங்கி உள்ளார்.

பின்னர் அந்த நபர் போதைப் பொருட்கள் தடுக்கும் போலீஸ் பிரிவை சேர்ந்த போலீஸ் என்றும் கூறியும்,  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்ததால் சோதனை செய்து கைது செய்ய வந்ததாகவும் கூறி உள்ளார்.

Thiruvallur fraud

மேலும் தனக்கு பணம் ரூ. 1 லட்சம் தரவில்லை என்றால் வழக்கு பதிவு செய்து  ஜெயிலுக்கு அனுப்பி விடுவதாகவும் ஜெயந்தியை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த கடைக்கார பெண் முதலில் 5000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட  மர்ம நபர் அந்தப் பணம் போதாது எனக் கூறி மேலும் ரூ.1 லட்சம் கேட்டுள்ளார்.

அவ்வளவுப் பணம் தன்னிடம் இல்லை என கடைக்காரப் பெண் கூறவே,  கழுத்தில் உள்ள தாலிச் செயினை அடகு வைத்து பணம் கொடுக்குமாறு  மர்ம நபர் கூறியிருக்கிறார். அதோடு அந்தப் பெண்ணை பைக்கில் அமர வைத்து, தாமாகவே அடகுக் கடைக்கு அழைத்துச் சென்ற மூன்று சவரன் தாலி செயினை அடகு வைத்து 46 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பெற்றுள்ளார்.

பின்னர் அந்த நபர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் மேலே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி கீழே உள்ள கலால் போலீஸ் அலுவலகத்தை காட்டி தான் அந்த அலுவலகத்தில் போலீசாராக பணியாற்றி வருவதாக கூறி மேம்பாலத்தின் மேலே அந்த பெண்ணை இறக்கி விட்டு தப்பியுள்ளார்.

Thiruvallur Fraud

அதைத்தொடர்ந்து அந்த பெண்மணி நடந்த சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்த உறவினரான போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

உறவினர் போலீசாரான அந்த நபர் சிசிடிவி பதிவான நபரை வீடியோ வைத்து திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க
துறை காவல் நிலையத்தில் விசாரித்ததில் அதுபோன்ற நபர் அங்கு பணியாற்றவில்லை என தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்கள் அதுபோன்ற போலீசார் உள்ளாரா என்பது குறித்து விசாரித்ததளும் அந்த நபர் போலீசார் இல்லை என்று தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெட்டிக்கடை பெண்மணி ஜெயந்தி திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரைப் பெற்ற போலீசார் பெட்டிக்கடை அருகிலுள்ள சிசிடிவி மற்றும் அடகு கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் வைத்து அந்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்ததில் அந்தநபர் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் கண்ணன் தெருவை சேர்ந்த கண்ணதாசன் (36) என்பது  தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ. 44 ஆயிரத்தை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்  ஏற்கனவே செவ்வாப்பேட்டை அரன்வாயல் பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்ற  வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு கலால் போலீசார் அவரை கைது செய்ததும் தெரியவந்தது.

இதனால் அந்த நபருக்கு மதுவிலக்கு அமலாக்கு போலீஸ் நிலையம் ஏற்கனவே தெரியும் என்பதால். நூதன முறையில் பெட்டிக்கடை பெண் உரிமையாளரை அந்த காவல் நிலையத்தில் வேலை செய்வதாக மிரட்டி நகை வைத்து பணம் பெற்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ