Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல ராப் இசை கலைஞர் சென்னையில் கடத்தல்

பிரபல ராப் இசை கலைஞர் சென்னையில் கடத்தல்

-

- Advertisement -

பிரபல ராப் இசை கலைஞர் சென்னையில் கடத்தல்

திருவேற்காடு அருகே மதுரையை சேர்ந்த ரேப் மியூசிக் கலைஞர் தேவ் ஆனந்த் கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர்

மதுரையை சேர்ந்த ரேப் மியூசிக் கலைஞர் தேவ் ஆனந்த் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார்டி ஆலில் நடைபெற்ற வேர்ல்ட் மியூசிக் டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் காரில் அவர்களது நண்பர்கள் கெவின், கிளப்பன் கிரிஷ், முகமது இபராஹிம் அகியோருடன் திருவேற்காடு அருகே மதுரவாயல் புறவழிசாலையில் காரில் வந்த போது திடீரென ஒரு பைக் தேவ் ஆனந்த் வந்த காரில் உரசியுள்ளது. இதையடுத்து காரில் இருந்த இப்ராஹிம் கீழே இறங்கி வாகனத்திற்கு சேதமாகியுள்ளதா என பார்த்துள்ளார்.

சென்னையில் விடிய விடிய சோதனை

அப்போது எதிரே பொலினோ காரில் வந்த 10 நபர்கள் தேவ் ஆனந்தை காத்தி முனையில் கடத்திச் சென்றனர். இதனையடுத்து அவரது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு காவல்துறையினர் தேவ் ஆனந்தின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது தனது அண்ணன் சிரஞ்சீவி தொழில் சம்மந்தமாக 5 பேரிடம் 2.5 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் அவர்கள் தன்னை கடத்தி நல்ல நிலையில் தற்போது வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து ராப் கலைஞர் கடத்தப்பட்டது குறித்து திருவேற்காடு காவல்துறை தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ