Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாண் பட்ஜெட்- பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா

வேளாண் பட்ஜெட்- பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா

-

- Advertisement -

வேளாண் பட்ஜெட்- பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா

பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

  • காவிரி படுகை உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் காவிரி படுகை பெருந்திட்டம்- ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
  • அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
  • ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மறுகட்டமைப்பு; 27 சேமிப்புக் கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்பு.
  • அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிப்பு.
  • காவிரி கடைமடைக்கு பாசன நீர்: தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; பயன்பெறும் நிலப்பரப்பு : 1,32,000 ஏக்கர்.
  • வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்திப் பராமரிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.
  • நுண்ணீர் பாசனம் நிறுவதற்கு ₹450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 எக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 எக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை.
  • பாரம்பரிய நெல் வகைகளை உருவாக்க மற்றும் பராமரிக்க 200 ஏக்கர் பரப்பளவில், விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க ₹50 லட்சம் ஒதுக்கீடு
  • பனை மேம்பாட்டுத் திட்டம்; பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
  • பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • ட்ரகன் ப்ரூட், அவகேடா, லிச்சி பழங்களை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 1000 ஹெக்டேரில், பேரீட்சை, அத்தி பயிர்களை சாகுபடி செய்ய பயிற்சி – ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • ஒவ்வொரு கிராமத்திலும் 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச் செடி தொகுப்பு வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

MUST READ