விருதுநகர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிச் செயலாளரை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம், கங்காகுளம் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மற்றும் அரசு உயரதிகாரிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, அம்மையப்பர் என்ற விவசாயி, ஊராட்சி மன்றச் செயலாளர் தங்கபாண்டியனை, மாவட்ட ஆட்சியர் மாற்றி நான்கு மாதங்கள் ஆகும் நிலையில், ஏன் ஊராட்சி மன்றச் செயலாளர் வந்திருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.
ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடி
இதில், கோபமடைந்த தங்கபாண்டியன், விவசாயியைக் காலால் எட்டி உதைத்தார். மேலும், ஊராட்சி மன்றச் செயலாளருக்கு ஆதரவாக மற்றொரு நபரும், அந்த விவசாயின் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் ஊராட்சி மன்றச் செயலாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர்.
“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!
தங்கபாண்டியன் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணியில் ஐந்து தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, தங்கபாண்டியனை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.