Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

-

ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன் வசித்து வருபவர் தண்டபாணி வயது (45),   திருப்பூரில் தனியார் கம்பெனியில்  ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இவரின் மகன் சுபாஷ் வயது (25) கடந்த 27.03.2023 அன்று திருப்பூரில் அவருடன் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா வயது (25) என்பவரை காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி இருந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

பின்னர் இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடு தனியாக வாடகை எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இதைத் தெரிந்து கொண்ட சுபாஷின் தந்தை தண்டபாணி நேற்று அவரது அம்மா கண்ணம்மாள் என்பவரை சந்திப்பதற்க்கு சொந்த கிராமமான அருணகிரி வந்த தண்டபாணி, அவரிடம் நைசாகபேசி நடந்தது நடந்து விட்டது சுபாஷின் தங்கை கூட இவ்வாறு தான் செய்தார் நான் என்ன செய்தேன், அவர்கள் வாழட்டும் என்று விட்டுவிடவில்லையா அதனால் அவர்கள் இருவரையும் ஊரில் உள்ள புதியதாக கட்டியுள்ள வீட்டுக்கு வர சொல் நாங்கள் அனைவரும் ஒன்றாக புதிய வீட்டிற்க்கு குடியேற விரும்புகிறேன் என்று கூறி அவர் அம்மா மனதை கலைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

இந்த நிலையில் பாட்டி கண்ணம்மா சுபாஷை அவரது மனைவியுடன் வீட்டுக்கு வரும்படி மிகவும் வற்புறுத்தி உள்ளார், உனது தந்தை சமாதானமாக போய்விட்டார் கோவம் எல்லாம் தீர்ந்து விட்டது குடும்பத்தை விட்டுபிரிந்து வாழ்வதால் அவர் மிகவும் கஷ்டப்படுகிறார் ஆகையால் இருவரும் வாருங்கள் ஒன்றாக இருக்கலாம் என்று சுபாஷிடம் பேசியுள்ளார்

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் தனது மனைவியுடன் சுபாஷ் அருணகிரியில்  உள்ள வீட்டிற்கு பாட்டியை காண வந்துள்ளார் . இரவு அனைவரும் சந்தோஷமாக பேசி சாப்பிட்டு தூங்கி உள்ளனர்  விடியற்காலை 5 மணி அளவில் சுபாஷின் தகப்பனார் தண்டபாணி கூர்மையான கத்தியால் காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகனை வெட்டி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

மேலும் சுபாஷை தடுத்த அவரது பாட்டி கண்ணம்மாளையும் வெட்டி இருக்கிறார், அருகில்  தூங்கிக் கொண்டிருந்த சுபாஷ் இன் மனைவி அனுசுயாவையும் வெட்டிருக்கிறார் இந்த நிலையில் சுபாஷின் மனைவி வீட்டை விட்டு தப்பித்து வெளியே சப்தம் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். சுபாஷ் அவரது பாட்டி கண்ணம்மா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பின் வீட்டை பூட்டி விட்டு தலைமறியாகிவிட்டார் தண்டபாணி.

சுபாஷின் வீட்டின் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் சுபாஷின் மனைவி அனுசுயா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். காலை அவ்வழியாக வந்த கிராம பொது மக்கள் சாலை ஓரம் ரத்தவெள்ளதில் கிடந்த சுபாஷின் மனைவி அனுசுயாவை கண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை திறந்து பார்த்தபோது இருவரும் சடலமாக கிடைப்பதைக் கண்டனர். இருவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனுசுயாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் ஊத்தங்கரை நீதி அரசர். அரசு மருத்துவமனைக்கு வந்து அனுசுயாவிடம் நேரடியாக வாக்குமூலத்தை பெற்று சென்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

இருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள தண்டபாணியை ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்மின் தலைமையிலான காவலர்கள் தேடி வருகின்றன.

MUST READ