Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 2 தேர்வை ஒன்றாக எழுதிய தந்தை, மகள்... திருச்சியில் சுவாரஸ்யம்

குரூப் 2 தேர்வை ஒன்றாக எழுதிய தந்தை, மகள்… திருச்சியில் சுவாரஸ்யம்

-

- Advertisement -

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வை தந்தை, மகள் இருவரும் எழுதியுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ முதனிலைத் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33 ஆயிரத்து 106 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில், திருச்சி பொன்மலைப்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் மையத்தில் தந்தை, மகள் இருவரும் குரூப் 2 தேர்வை எழுதியுள்ளனர்.

தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இளங்கோவன், கடந்த 20 ஆண்டுகளாக போட்டி தேர்வுகளை எழுதி வருகிறார். விடாமுயற்சியாக தற்போது 20-வது முறையாக குரூப் 2 தேர்வினை எழுதியுள்ளார்.  பொறியியல் பட்டதாரியான அவரது மகள் மதுபாலாவும் தற்போது போட்டித்தேர்வுகளை எழுதி வருகிறார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற குருப் 2 தேர்வுக்கு தந்தை, மகள் இருவருக்கும் ஒரே மையத்தில் இரு வேறு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தேர்வு முடித்து வந்த ஆசிரியர் இளங்கோவன் மற்றும் அவரது மகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

 

MUST READ