கோவை மாவட்டம், அன்னூரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவரது உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணத்தை கரைத்து ஊத்தி புகைப்படத்தை கிழித்து, தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கோவை வடக்கு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கடந்த 8ஆம் தேதி பெரியாரை இழிவுப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அன்னூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சீமானை கண்டித்து அவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு, சாணி கரைத்து ஊற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அவரது உருவப்படத்தை கிழித்து காலில் போட்டு மிதித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். சீமானின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அவரது உருவப் படத்தை கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் மாவட்டம் செயலாளர் த.சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராமன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சரவணன், கிளை கழக பொறுப்பாளர்கள் சிதம்பரம், பெருமாள், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீய சக்தி சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – வைகோ கண்டனம்