வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கும், அயோத்தியில் இருந்து சென்னைக்கும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பனிமூட்டம், கடும் குளிர்: வட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வரும் ஜனவரி 22- ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் உள்ள பிரசித்திப் பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அயோத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என 8,000- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கும், அயோத்தியில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சென்னை- அயோத்திக்கான டிக்கெட் விலை ரூபாய் 6,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் விமான டிக்கெட் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.