Homeசெய்திகள்தமிழ்நாடுபிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!

பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!

-

- Advertisement -

 

TASMAC - டாஸ்மாக்

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தள்ளிப் போகும் ‘இந்தியன் 2’ ரிலீஸ்….. காரணம் என்ன?

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்வு உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படும். 180 மி.லி. அளவுக் கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபான விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவுக் கொண்ட உயர் ரக மதுபானங்களின் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

விஜய்யின் GOAT படத்தைக் கண்டு கொள்ளாத நெட்ஃபிளிக்ஸ்!

இதேபோல் பீர் வகைகளின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி. கொள்ளளவு கொண்ட மதுபானங்களும் அந்தந்த ரகங்களுக்கு தகுந்த அளவில் விலை உயர்வுச் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ