Homeசெய்திகள்தமிழ்நாடு12 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது ஃபெங்கல் புயல்..

12 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது ஃபெங்கல் புயல்..

-

- Advertisement -
ஃபெங்கல் புயல்
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறுகிறது.  

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 22ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில் இன்று புயலாக உருவாகிறது. இந்தப் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
12 மணி நேரத்தில் உருவாகிறது ஃபெங்கல் புயல்..

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 400 கி.மீ தென்கிழக்கிலும், சென்னைக்கு 590 கி.மீ தெற்கு தென்கிழக்கிலும், புதுச்சேரியிலிருந்து 510 கி.மீ தொலைவிலும், இலங்கை திரிகோணமலையிலிருந்து 130 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுவரை 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் சின்னம் நகரும் வேகம் அதிகரித்துள்ளதால் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ