Homeசெய்திகள்தமிழ்நாடுஃபெங்கல் புயல்: நிவாரணத் தொகை வழங்க வேண்டும் - அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

ஃபெங்கல் புயல்: நிவாரணத் தொகை வழங்க வேண்டும் – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

-

- Advertisement -

ஃபெங்கல் புயல்: நிவாரணத் தொகை வழங்க வேண்டும் - அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

வங்கக்கடலில் இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில் , ”தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு  திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

MUST READ