காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூரில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை முடித்து, பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவர் சிந்துவுக்கு கடந்த ஐந்து நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
சிந்துவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து உயர்தர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (செப்.15) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது பற்றி ஆய்வுச் செய்ய சென்னைக்கு ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.