Homeசெய்திகள்தமிழ்நாடு"திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசவில்லை"- மன்னிப்புக் கோரிய ஏ.வி.ராஜு!

“திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசவில்லை”- மன்னிப்புக் கோரிய ஏ.வி.ராஜு!

-

- Advertisement -

 

"திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசவில்லை"- மன்னிப்புக் கோரிய ஏ.வி.ராஜு!

நடிகை த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமது பேச்சுக்கு அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

உறியடி விஜய் குமாரின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு திரைப்பட நடிகைகளை கூவத்தூர் விவகாரத்தில் தொடர்புப்படுத்திப் பேசினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திரையுலகைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவின் பெயரை அவர் குறிப்பிட்டு பேசியிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கவனம் பெறுவதற்காக சிலர் தரைகுறைவாகப் பேசுவதாக அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. இனி இதுப்போன்று நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எடுக்கப் போவதாகவும் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இவர் பார்க்காத ஒரு விஷயத்தை, இவருக்கு முழுமையாக தெரியாத விஷயத்தை எதோ ரொம்ப தெரிந்த மாதிரி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள ஆடியோவில் திரைத்துறை சகோதரிகளை கேவலமாக பேசுவது மனதை நோகச் செய்கிறது என்று கூறினார். நடிகை த்ரிஷா விவகாரத்தில் அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார்.

பிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு?

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரி ஏ.வி.ராஜு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசவில்லை. யார் மனதாவது புண்பட்டிருந்தால் சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகைகள் காயத்ரி ரகுராம், குஷ்பூ, பாடகி சின்மயி, இயக்குநர் சேரன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ