Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

-

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மழை தொடர்பான நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் மழை தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மழை தொடர்பான நிகழ்வுகளில் மதுரை, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும், சிவகங்கையில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பருவமழையின் காரணமாக உயிரிழந்த 4 நபர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.4 இலட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ