இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த சில நாட்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்கி, அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங்-க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, இன்று (ஆகஸ்ட் 22) காலை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக, அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரைப் பாராட்டியுள்ளார்.
“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு ரூபாய் 10 கோடி வழங்குவதாகவும், தமிழக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழக அரசும், தமிழக மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவித் தேவைப்பட்டால் தன்னைத் தொடர்புக் கொள்ள தயங்க வேண்டாம் என்றும், தமிழக முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.” இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.