Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

-

- Advertisement -
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பட்டாசு வெடித்ததில், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தீப ஒளித்திருநாளையொட்டி நாடு முழுவதும் மக்கள்   பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் இரண்டு சிறுவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ராக்கெட் வெடித்ததில், எதிர்பாராத விதமாக அந்த ராக்கெட் அருகே உள்ள அனிதா என்பவரது குடிசையின் மீது விழுந்தது.

 பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

அத்துடன் குடிசை வீட்டின் மீது விழுந்த பட்டாசு வெடித்து சிதறியதால், வீடு முழுவதும் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் தீயை அனைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர் ஆனால் அதற்குள்ளாக தீ பரவி வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

இதில் வீட்டிலிருந்த பிரிட்ஜ், டிவி, நகை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் போன்றவை எரிந்து நாசமானது. விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி தினமான இன்று குடிசை எரிந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ