வணிக வளாகத்தில் மின் கசிவால் தீ விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமாக வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடைகளை மூடிவிட்டு கடையின் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு பதினொன்று மணி அளவில் மீட்டர் பாக்ஸ் உள்ள அறையில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் மீட்டர் பெட்டிகளும், நான்கு பேட்டரிகளும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.எழுபது ஆயிரமாகும். இந்த விபத்து குறித்து சின்னசேலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.