Homeசெய்திகள்தமிழ்நாடுஎவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் – அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துக்கள்

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் – அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துக்கள்

-

- Advertisement -

அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ள முத்தமிழ் செல்விக்கு  இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ் பெண்மணிக்கு வாழ்த்துகள் - அமைச்சர் தங்கம் தென்னரசு

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த  முத்தமிழ் செல்வி, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது, அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ளார். அவர் இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்திய ஒன்றியத்தின் முன்னோடி மாநிலமாக எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கிட, பெரும் பணியாற்றி வரும் மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

இனிமேல் ஹோட்டல்களில் இவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்

MUST READ